close
Choose your channels

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரை நட்சத்திரங்கள் யார் யார்?

Monday, January 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி நடிகர், நடிகைகளின் பங்கு நிச்சயம் அதிகளவில் இருக்கும் என்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நட்சத்திரங்கள் குறித்து பார்ப்போம்

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டி உறுதி என்று அவரே பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் '2.0' பட வில்லனும் பிரபல பாலிவுட் நடிகருமாகிய அக்சயகுமார், டெல்லி அல்லது பஞ்சாப் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மற்றொரு பாலிவுட் நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தீஷ் தேஷ்முக் காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தெரிகிறாது.

மேலும் நடிகைகள் குஷ்பு, நக்மா, ரம்யா ஆகியோர்களும் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.