புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிய பிரபல நடிகர்கள்!
’கருப்பன் குசும்புக்காரன்’ என்ற வசனத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்
சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் பஞ்சாயத்து காட்சியில் கம்பீரமாக இரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசிய நடிகர் தவசி, தற்போது உடல் மெலிந்து பார்க்கவே மிகவும் சோகமாக காட்சி அளிக்கிறார்
அவரது சிகிச்சைக்கு திமுக எம்.எல்.ஏ சரவணன் அவர்கள் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புற்று நோயால் நடிகர் தவசி பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவியும், நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவியும் செய்துள்ளனர். மேலும் நிதி உதவி தேவை என்றால் தங்களை தாராளமாக கேட்கலாம் என தவசி குடும்பத்தினர்களுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சூரி தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகர்களின் உதவியால் தற்போது தவசி தேறி வருவதாகவும் விரைவில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது