close
Choose your channels

கமல், ரஜினியுடன் நடித்த மாதவியின் 3 மகள்கள்: வைரல் புகைப்படம்!

Wednesday, July 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல் ரஜினி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை மாதவியின் மூன்று மகள்களின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ரஜினிகாந்த் நடித்த ’தில்லுமுல்லு’ ’தம்பிக்கு எந்த ஊரு’ ’விடுதலை’ போன்ற படங்களிலும் கமல்ஹாசன் நடித்த ’ராஜபார்வை’ ’டிக் டிக் டிக்’ ’காக்கிசட்டை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர் நடிகை மாதவி. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை மாதவி கடந்த 1996 ஆம் ஆண்டு அவருடைய ஆன்மீக குருவின் ஆலோசனைப்படி அமெரிக்க தொழிலதிபர் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மாதவி - சர்மா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மாதவியின் மூன்று மகள்கள் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மாதவிக்கு இவ்வளவு அழகான மூன்று மகள்களா? என நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.