close
Choose your channels

காதலரை கைப்பிடித்த நடிகை அபிநயா.. திருமண சடங்குகளின் அசத்தல் புகைப்படங்கள்..!

Thursday, April 17, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அபிராமி தனது காதலரை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில், அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் நடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’நாடோடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா . இதனை அடுத்து அவர் ’ஈசன்’, ’ஏழாம் அறிவு’, ’வீரம்’, ’தனி ஒருவன்’, ’தடையற காக்க’, ’குற்றம் 23’, ’நிசப்தம்’, ’விழித்திரு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவர் நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வருகிறார்.

இந்த நிலையில், நடிகை அபிநயாவுக்கும் அவரது நீண்ட நாள் காதலர் கார்த்திக் என்பவருக்கும், கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் கார்த்திக் மற்றும் அபிநயாவுக்கு திருமணம் நடந்தது. இன்று, அபிநயா திருமணம் மற்றும் திருமண சடங்குகளின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment