close
Choose your channels

கடவுளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Wednesday, January 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் கடவுளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘கடவுளுக்கு ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் கிடையாது, எந்த கடவுளும் எனது கோயிலுக்கு இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை, அப்படி எந்த கடவுளாவது சொல்லி இருக்கிறார்களா? சொல்லுங்கள்? என்றும் அவர் கேட்டார்.

அதேபோல் எந்த கடவுளும் இதை செய்யக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை, எல்லாமே மனிதர்கள் தான் உருவாக்கியது, கடவுளுக்கும் இந்த கட்டுப்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற கட்டுப்பாடுகளை நான் எப்போது நம்புவதில்லை, இப்பொழுதும் கூட கிராமத்தில் உள்ள சில பகுதிகளில் ஆணாதிக்கம் அதிகம் உள்ளது, அதே போல் தான் கடவுள் விஷயத்திலும் ஆணாதிக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.