நடிகை அமலா நடித்த 'கணம்' ரிலீஸ் தேதி: ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிவிப்பு

வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது 'கணம்'. இந்தப் படத்தின் டீஸர் மற்றும் 'அம்மா’ பாடலுக்கு சமூக வலைதளத்தில் வெகுவாக பாராட்டு கிடைத்தது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக மெனக்கிடலை படக்குழு அளித்து வருகிறது. பணிகள் முடிந்து செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாகப் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவான திரைப்படம் என்பதால், தமிழில் வெளியாகும் அதே நாளில், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்கிற பெயரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ‘கணம்’ படம் குறித்த பல ஆச்சரியமூட்டும் அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது

More News

எனக்கு எதிராக சிலர் கடுமையாக உழைத்தார்கள்: நடிகை அமலாபால்

நடிகை அமலாபால் நடித்து தயாரித்த 'கடாவர்' என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

'யானை' இந்தியில் எடுத்தால் இவர்தான் ஹீரோயின்: அருண்விஜய்

அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான 'யானை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அருண்விஜய் மற்றும் ஹரி ஆகிய இருவருக்குமே

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த சூப்பர்ஹிட் தம்பதிகளா?

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் அடுத்து நடிக்க இருக்கும் 'ஏகே 62' திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே

விக்ரமின் 'கோப்ரா' புதிய ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு1

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என

'விருமன்' திரைப்படத்தில் திடீரென இணைந்த இளையராஜா!

கார்த்தி, அதிதிஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'விருமன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன்