close
Choose your channels

மஞ்சள் காஸ்ட்யூமில் தகதகவென ஜொலிக்கும் அமலாபால்.. வேற லெவல் போட்டோஷூட்

Sunday, December 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் அமலாபால் நடித்து வெளியான ’கேடாவர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தற்போது அவர் மம்முட்டியுடன் ’கிரிஸ்டோபர்’ என்ற படத்தில் நடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அமலாபால் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் மஞ்சள் நிறத்தில் தகதகவென ஜொலிக்கும் காஸ்டியூமில் உள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை அமலா பால் ’அதோ அந்த பறவை போல’ என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது ஹிந்தி மலையாள படங்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.