எனக்கும் தங்கம் கிடைத்துவிட்டது: நடிகை அமலாபால் குஷி!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

எனக்கும் தங்கம் கிடைத்துவிட்டது என நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்திய திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசா வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த விசா பெற்றவர்கள் ஐக்கிய அரபு நாட்டில் 10 ஆண்டுகளில் அந்நாட்டின் குடிமகன் போலவே கௌரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களாக மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர் என்பதும் தமிழ் திரையுலக நட்சத்திரங்களான த்ரிஷா, பார்த்திபன், பாடகி சித்ரா ஆகியோர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள அமலாபால், ‘தங்கத்தை தேடி ஓடவேண்டும் என்று கூறுவார்கள், நானும் ஓடினேன், எனக்கும் இப்போது தங்கம் கிடைத்துவிட்டது’ என குஷியுடன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' மற்றும் 'ஜெயில்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சமீபத்தில் வெளியான படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

எலிமினேஷனுக்கு பின்னர் சந்தித்து கொண்ட வருண்-அக்சரா: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களான வருண் மற்றும் அக்சரா கடந்த ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு பின் இருவரும் சமீபத்தில்

யோகிபாபு வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட உதயநிதி-சிவகார்த்திகேயன்!

நடிகர் யோகி பாபு வீட்டில் நடந்த முக்கிய விசேஷம் ஒன்றில் நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டதன் புகைப்படங்கள்

திருவொற்றியூர் கட்டிட விபத்து நடந்தது எப்படி? நிவாரணம் குறித்த தகவல்!

சென்னை- திருவொற்றியூர் அடுத்த அரிவாகுளம் எனும் கிராமப்பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த