close
Choose your channels

தென்னை மரத்தின் தெறி போஸ்: அமலாபாலின் மாலத்தீவு வீடியோ!

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சுற்றுலா சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் நீச்சலுடையுடன் கூடிய கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் தென்னை மரத்தின்கீழ் தெறியான கிளாமர் போஸ் கொடுத்துள்ள காட்சி, மாலத்தீவு பீச்சில் ஒய்யாரமாக நடந்து செல்லும் காட்சி உள்பட பல்வேறு காட்சிகளின் தொகுப்புகள் உள்ளன.

இந்த வீடியோ வெளியாகி ஒருசில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் ஒரு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அமலாபால் நடித்த ’கடாவர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த ’அதோ அந்த பறவை போல’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் ’டீச்சர்’ ’கிரிஸ்டோபர்’ ’ஆடுஜீவிதம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.