close
Choose your channels

இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட நடிகை அமலாபால்… வேறலெவல் புகைப்படம் வைரல்!

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான “மைனா“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால். தனது யாதார்த்தமான நடிப்பு மற்றும் மேக்கப் இல்லாத எளிமையால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மேலும் தமிழைப் போலவே தெலுங்கிலும் அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி முத்திரையைப் பதித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “ஆடை” திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்றது. இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் இவர் தற்போது “அதே அந்தப் பறவேபோல“ எனும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு சண்டை காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிப்பைத் தவிர சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருக்கும் நடிகை அமலாபால் “கடாவர்“ எனும் திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் மலையாள சினிமாவில் நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து “ஆடுஜீவிதம்“ எனும் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தொடர்ந்து பாலிவுட்டிலும் தற்போது கால்பதித்து உள்ளார். அந்த வகையில் இந்தி வெப்சீரிஸில் நடித்துவரும் இவர் 80களில் பிரபல நடிகையாக வலம்வந்த நடிகை பர்பீன் பாபியின் கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.


மேலும் நடிப்பு, தயாரிப்பு எனப் பிசியாக இருந்துவரும் நடிகை அமலாபால் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதோடு விதவிதமான போட்டோஷுட் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தற்போது மினி ஸ்கர்ட் மற்றும் கறுப்புநிற சேலை உடுத்திய கிளாமர் போட்டோஷுட் புகைப்பபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.