கர்ப்பிணி நடிகைக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டணம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தெறி', 'தங்கமகன்', 2.0' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை எமிஜாக்சன் கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் நேற்று அவரது நிச்சயதார்த்தம் லண்டனில் சிறப்பாக நடந்தது.

நடிகை எமிஜாக்சன் கடந்த சில ஆண்டுகளாக லண்டனை சேர்ந்த கோடீஸ்வரர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். ஜார்ஜ்-எமி திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திடீரென கர்ப்பமானார். இது எதிர்பாராத கர்ப்பம் என்றாலும் நாங்கள் பெற்றோர்களாக முடிவு செய்துவிட்டோம் என்று எமிஜாக்சன் கூறியுள்ளார். அவருக்கு வரும் டிசம்பர் மாதம் பிரசவம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜார்ஜ்-எமி நிச்சயதார்த்தத்தில் நண்பர்கள், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த விழா குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

ஸ்டண்ட் சில்வாவுக்கு கிடைத்த பெருமைக்குரிய விருது!

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சில்வா, தமிழ் திரையுலகில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இனி கார்ஃபைடு கல் வேண்டாம்! பழங்கள் பழுக்கவைக்க வந்தது புது டெக்னிக்! வியாபாரிகள் மகிழ்ச்சி!

பழ சந்தைகளில் உடனடியாக பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்ஃபைட் கற்களை வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். இதனால் உடலுக்கு அதிக அளவு தீங்கு உள்ளது என்பதை அறிந்தும்

10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம்! பணத்திற்காக அரங்கேறிய அவலம்!

பணத்திற்கு ஆசைப்பட்டு, 10 வயது மகளை 40 வயதாகும் நபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த, கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்...

இனி "தலப்பாகட்டி பிரியாணியை" பயன்படுத்த கூடாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உணவு பிரியர்களை பொறுத்தவரை, பல பிரியாணி கடைகள் இருந்தாலும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையை தேடி சென்று சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர்...

இராவண கோட்டம் படத்தின் நாயகி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ள 'இராவண கோட்டம்' என்ற திரைப்படத்தை 'மதயானைக்கூட்டம்' பட இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கவுள்ளார்