டாக்டர், எஞ்சினியர் ஆகுப்பா, இதெல்லாம் தேவையில்லாத வேலை: ரசிகருக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

டாக்டர், என்ஜினீயர் ஆவதை விட்டுவிட்டு இதெல்லாம் ஏன் தேவையில்லாத வேலை என ரசிகர் ஒருவருக்கு பிரபல தமிழ் நடிகை ஒருவர் அட்வைஸ் கூறியுள்ளார்

சித்தார்த் நடித்த ’காவியத்தலைவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனைகா சோட்டி, அதன் பின்னர் ஜீவா நடித்த ’கீ’ சந்தானம் நடித்த ’பாரிஸ் ஜெயராஜ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனைகா சோட்டியிடம் ரசிகர் ஒருவர் நாற்காலி ஒன்றின் புகைப்படத்தை பதிவு செய்து ’நான் உங்களை போன்ற அழகான பெண்கள் உட்காருவதற்கு நாற்காலியாக மாற விரும்புகிறேன் என்று பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த அனைகா சோட்டி ’உங்களது பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உங்களை டாக்டராக இன்ஜினியராக பார்க்க ஆசைப்பட்டு படிக்க வைக்கின்றார்கள். ஆனால் நீங்களோ 200 ரூபாய் சேராய் இருக்க ஆசைப் படுகிறீர்கள், இதெல்லாம் நல்லாவா இருக்கு, ஒழுங்கா நன்றாக படித்து முன்னேறுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலானதை அடுத்து அனைகா சோட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.