பாஜக பிரமுகர் புகார் எதிரொலி: பிரபல நடிகை-இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

பாஜக பிரமுகர் ஒருவர் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகை மற்றும் இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தான். இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து காரசாரமாக பேசினார். லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பயோவெப்பன் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகை ஆயிஷா சுல்தான் மீது பாஜக பிரமுகர் அப்துல் காதர் ஹாஜி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் நடிகை சாயிஷா சுல்தான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது பேச்சு குறித்து விளக்கமளித்து ஆயிஷா சுல்தான், லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் பட்டேலை பயோவெப்பன் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பிரஃபுல் படேல் என்பவர் மாட்டிறைச்சிக்கு தடை, மது பானங்களுக்கு தடை, பள்ளிகளில் இறைச்சிக்கு தடை என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.