தல-தளபதி குறித்து பிரபல நடிகை-அரசியல்வாதியின் கருத்து

  • IndiaGlitz, [Tuesday,May 09 2017]

தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக இருக்கும் தல அஜித் மற்றும் இளையதளபதி விஜய் குறித்த செய்திகள் வராத நாளோ அவர்களை குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவிக்காத நாளோ இதுவரை இருந்ததில்லை.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகையும், நடன இயக்குனரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் அஜித், விஜய் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

அஜித் குறித்து அவர் கூறியபோது, "தல அஜீத் ஒரு சிறந்த மனிதர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லா இளைஞர்களும் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்

அதேபோல் விஜய் குறித்து அவர் கூறியபோது, "தளபதி விஜய் சிறந்த இதயங்களின் அரசன் என்று கூறலாம். அனைவரையும் திருப்திபடுத்த நடிப்பில் அவர் எடுக்கும் முயற்சிகள், அர்ப்பணிப்பு அளவில்லாதது. அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர்" என்று கூறியுள்ளார்.

தல, தளபதி குறித்து காயத்ரி ரகுராம் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

More News

உலகப்புகழ் பெற்ற அதிரடி மன்னன் புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்கள் இந்திய சினிமாவில் ஹிட்டாகி வரும் நிலையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் திரைப்படமாகவுள்ளது...

'விஐபி 2' ரிலீஸ் எப்போது? தனுஷின் அதிரடி அறிவிப்பு

தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமான 25வது நாள் என்ற மைல்கோட்டை நேற்று கடந்தது...

அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் திடீர் தற்கொலை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொடநாடு எஸ்டேட் கொலை, கொலையாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களின் விபத்து உள்ளிட்ட பல மர்ம சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் இன்று தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளத்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சச்சின் ஆந்த்தம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இசையுலக ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மான் முதல்முதலில் இணைந்துள்ள 'சச்சின்: தி பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது...