ரெண்டும் ஒன்றா சாய்பல்லவி? கண்டனம் தெரிவித்த விஜயசாந்தி

  • IndiaGlitz, [Saturday,June 18 2022]

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி மத ரீதியிலான சர்ச்சைக்குரிய ஒரு கருத்து தெரிவித்த நிலையில் அவரது கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்தோம்.

சாய்பல்லவிக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, நடிகை குத்து ரம்யா உள்பட பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது நடிகை விஜயசாந்தி, சாய்பல்லவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, ‘சாய்பலல்வி தான் கூறிய கருத்துக்களை ஒரு நிமிடம் நிதானமாக சிந்தித்து பார்த்தால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் அவருக்கு தெரியும்.

ஒரு தாய் தன் மகனை அடித்து கண்டிப்பதற்கும், ஒரு திருடன் அடிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? இந்த இரண்டும் ஒன்றாகி விடாது. இதுபோன்ற சென்சிட்டிவான மத விஷயங்களை முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று சாய்பல்லவிக்கு அறிவுரை கூறுகிறேன் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி சாய்பல்லவி நடித்த ’விராட பருவம்’ திரைப்பட தயாரிப்பாளர் இந்த விஷயத்தை தன்னுடைய படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்தி வருவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

More News

நேற்று வெளியான குழந்தைகள் படத்திற்கு 14 நாடுகள் தடை: அதிர்ச்சி தகவல்

நேற்று வெளியான குழந்தைகள் திரைப்படத்திற்கு 14 நாடுகள் தடை விதித்து இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கார்த்தி ரசிகர்களை தாக்கிய போலீசாருக்கு ரூ.3 லட்சம் அபராதம்!

கார்த்தி ரசிகர்களை தாக்கிய போலீசாருக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா? ரஜினியின் 'ஜெயிலர்' பதிவு குறித்து சுரேஷ் காமாட்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும்

ஐஸ்வர்யா ராய் போல் நடனம் ஆட முயற்சித்த நடிகை கஸ்தூரி: வைரல் வீடியோ

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான ஒரு பாடலில் ஐஸ்வர்யா ராய் மழையில் நனைந்து சூப்பராக நடனம் ஆடியிருந்த ஒரு பாடலுக்கு நடிகை கஸ்தூரி செம டான்ஸ் ஆடிய வீடியோ

'விக்ரம்' தமிழ்நாட்டின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா? உதயநிதி கூறிய ஆச்சரிய தகவல்!

கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் தமிழக ஷேர் தொகையை உதயநிதி ஸ்டாலின் கூறியதை பார்த்து திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.