close
Choose your channels

முதல்முறையாக முயற்சி செய்கிறேன்: நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ!

Thursday, July 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது திரையுலக வாழ்வில் முதல் முறையாக இதை முயற்சி செய்கிறேன் என நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிசாசு 2’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு முதல் முறையாக தனது சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் நடிகை ஆண்ட்ரியா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’முதன்முதலில் நான் தெலுங்கில் டப்பிங் பேசுகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு தெலுங்கு கற்றுக் கொடுக்கும் ஒரு நபர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

’பிசாசு 2’ திரைப்படத்தை நடிகை ஆண்ட்ரியா மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் என்றும், இந்த படம் வெளியானதும் தமிழில் தனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.