close
Choose your channels

படு குஷியாக வரலாற்று அதிசயங்களை சுற்றிக்காட்டும் தமிழ் நடிகை… மாஸ் புகைப்படம்!

Thursday, November 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

அந்த வகையில் “ஆயிரத்தில் ஒருவன்“, “அரண்மனை“, “விஸ்வரூபம்“, “தரமணி“, “துப்பறிவாளன்“, “வடசென்னை“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் கமலுடன் “விக்ரம்“ படத்தில் இணைந்துள்ள அவர் “மாளிகை“, “நோ எண்ட்ரி“, “வட்டம்“ , “பிசாசு 2“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா, தற்போது எகிப்து நாட்டிற்கு பயணம் செய்து அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில் கொய்ரோவில் உள்ள Giza pyramids எனப்படும் பழங்கால எகிப்து பிரமீடுகளின் அருகில் நின்று நடிகை ஆண்ட்ரியா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். கி.மு. 2,600- 2,500 களுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த பிரமீடுகளில் எகிப்து மன்னர்களின் கல்லறைகள் மற்றும் அந்தக்கால தொழிலாளர்களின் அடையாள எச்சங்களும் நிறைந்திருக்கின்றன.

மேலும், Alexandria வில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற அவர் அங்குள்ள பழைய கஃபேக்களையும், குகைகளையும் சுற்றிப்பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.