அஞ்சலியின் 50 வது படத்தின் டைட்டில் இதுதான்: செம்ம ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Saturday,May 27 2023]

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடிகைகளில் ஒருவரான அஞ்சலியின் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

அஞ்சலியின் 50 வது திரைப்படத்திற்கு ’ஈகை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிரீன் அம்யூஸ்மென்ட் மற்றும் டி3 ப்ரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அசோக் வேலாயுதம் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவும், தருண்குமார் இசையும், பிரவீன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். பரதன் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மழை பெய்து கொண்டிருக்கும் குடைபிடித்தவர்கள் நடுவே அஞ்சலி இருக்கும் அட்டகாசமான காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அபுதாபி வெள்ளை டவரில் நம்மூர் தேவதை… சூர்யா, கார்த்தி பட நடிகையின் அட்டகாசமான புகைப்படம்!

அபுதாபியில் தற்போது நடைபெற்று வரும் ஐஐஎஃப்ஏ சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தியுடன் நடித்த நடிகை ஒருவர்

'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த்? இதுதான் காரணமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் 'ஜெயிலர்'.

'என்னடா நடக்குது': அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்த தனுஷ்..!

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் தனுஷ், அனுஷ்கா ஷெட்டியின் அடுத்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணமின்றி கணவருடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பது மனக் கொடுமைக்குச் சமம்… நீதிமன்றம் அதிரடி

விவகாரத்து கோரிய வழக்கு ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் காரணமே இல்லாமல் நீண்ட காலம் தனது துணையோடு உடலுறவு கொள்ள சம்மதிக்காமல் இருப்பது மனக்கொடுமை

சம்மரை சமாளிக்க நீச்சல் குளம் போட்டோஷுட்… 50 வயது நடிகையின் ஹாட் புகைப்படம் வைரல்!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் நடிகை ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபடியே போட்டோஷுட் நடத்திய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது