'குக் வித் கோமாளி' சீசன் 3க்கு அழைத்தால் போக மாட்டேன்: விஜய் பட நடிகை பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி சீசன் 2 மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் சீசன் 1ஐவிட சிசன் 2 இரு மடங்குக்கும் மேலாக வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி விட இந்த நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்ற கருத்து கணிப்பு கூட வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குக்’களுக்கும், கோமாளிகளுக்கும் மிகப்பெரிய அளவில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் குக் வித் கோமாளி சீசன் 3 இல் வாய்ப்பு கிடைத்தால் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

’சிவா மனசுல சக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ’மதுரை சம்பவம்’ ’நகரம்’ ’நண்பன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அனுயா. இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரே வாரத்தில் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் எனக்கு அழைப்பு விடுத்தால் நான் சொல்ல மாட்டேன் என்றும் ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமானால் தமிழ் நன்றாக தெரிய வேண்டும் என்றும் தமிழில் நன்றாக ஜோக் சொல்ல வேண்டும் என்றும் எனக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


 

More News

குக் வித் கோமாளி' ஃபைனலில் திடீர் மாற்றம்: ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது என்பதும், இந்த சீசனில் கலந்து கொண்ட குக்'களும்,

ரஜினிக்கு மிக உயர்ந்த விருது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்றுமுன்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் திரையுலகின் மிக உயர்ந்த விருது அறிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் 

'தளபதி 65' படபூஜையில் கலந்து கொண்ட இந்த நடிகை யார்?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் 'தளபதி 65' திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும் இந்த பூஜை சம்பந்தமான புகைப்படங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர்

பெண்களை இழிவுபடுத்தும் திமுக-விற்கு மக்கள் பாடம் கற்றுத்தாருங்கள்...! ராஜ்நாத் சிங் காட்டம்..!

பெண்களை இழிவுபடுத்தி பேசும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, பொதுமக்களாகிய நீங்கள் சரியான பாடத்தை கற்றுத்தரவேண்டும் என்று இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

99 சாங்ஸ் விழாவில் இந்தியில் பேசியது ஏன்? தொகுப்பாளினி விளக்கம்!

சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் தயாரித்து, இசை அமைத்து, கதை எழுதிய '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.