close
Choose your channels

இசைஞானிக்கு இசையால் வாழ்த்து கூறிய 'சூரரை போற்று' நாயகி!

Thursday, June 3, 2021 • தமிழ் Comments

இசைஞானி இளையராஜா நேற்று தனது 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள் என்பதை பார்த்தோம்

பாடகி சின்னக்குயில் சித்ரா உள்பட ஒருசில பாடகிகள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பாடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை பாடி அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த ‘ப்ரியா’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஏ பாடல் ஒன்று’ என்ற பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் இந்த பாடலை என்றுமே மறக்க முடியாது என்றும் ஜேசுதாஸ் மற்றும் ஜானகி அம்மா பாடிய இந்த பாடல் எப்போதும் தனது மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றும் இளையராஜா அவர்களின் இசை இந்த உலகிற்கு கிடைத்த பரிசு என்றும் தெரிவித்துள்ளார். அபர்ணா பாலமுரளி பாடிய இந்த பாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz