close
Choose your channels

'பீஸ்ட்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட அபர்ணா தாஸ்!

Sunday, December 5, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அப்ர்ணாதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிகை அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். இவர் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் 'பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி உடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து 'பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 'பீஸ்ட்’ சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட அபர்ணாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz