close
Choose your channels

'பாபநாசம்' நடிகை ஆஷாவுக்கு திருமண வயதில் மகளா? வைரலாகும் புகைப்படங்கள்..!

Thursday, March 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை ஆஷா சரத்தின் மகள் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து திருமண வயதில் ஆஷா சரத்துக்கு மகள் இருக்கிறாரா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கமலஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'பாபநாசம்’ என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தவர் ஆசா சரத். அதுமட்டுமின்றி இவர் பல மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்’ திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் நடிகை ஆஷா சரத்தின் மகள் உத்தாரா திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் பல மலையாள திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பாக மோகன்லால் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளின் திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஆஷா வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு பார்த்து ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.