நடிகை அசின் மகளா இவர்? புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமடைந்த நெட்டிசன்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,October 27 2022]

நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து அசின் மகளா இவர்? அதற்குள் இவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அசின் என்பதும் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்பட பல பிரபலங்களுடன் நடித்தார் என்பதும் தெரிந்ததே. கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ திரைப்படம் அசினுக்கு மிகப் பெரிய புகழை பெற்று தந்தது.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்ட அசினுக்கு ஆரின் என்ற பெண் குழந்தை 2017 ஆம் ஆண்டு பிறந்தது. தனது குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் அசின் தற்போது அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து கூறும் வகையில் தனது மகளின் புகைப்படத்தை அசின் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில், ‘எனது மகள் எங்கள் வாழ்வின் ஒளி, இன்று அவருடைய பிறந்த நாள், ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நாங்கள் உன்னை எல்லையற்ற அன்புடன் வளர்த்து வருகிறோம். கனிவான இதயம், ரசமான புன்னகை, நகைச்சுவையான கருத்துக்கள் மற்றும் நடன அடைவு கொண்ட நீ எங்களுக்கு குழந்தையாகனதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்’ என்று பதிவு செய்துள்ளார். அசினின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

'பொன்னியின் செல்வன்' ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன்?

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஓடிடியில் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

5வது முறையாக அஜித்துடன் இணையும் 'பொன்னியின் செல்வி': ;'ஏகே 62' அப்டேட்

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் தற்போது இந்த படத்தின் டப்பிங்

லோகேஷ் கனகராஜ் கொடுத்த 'தளபதி 67' படத்தின் மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் செய்திகளை விட மிகவும் ஆர்வமாக 'தளபதி 67' தகவல்களை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

மாலத்தீவு டூரை முடித்த அமலாபால்.. பிறந்த நாளை எங்கே கொண்டாடியிருக்கார் பாருங்கள்!

 நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்த சிங்கிள் பீஸ் பிகினி புகைப்படங்கள் உள்பட பல கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் புத்தம் புதிய வெப் சீரிஸ் - "ஜான்சி"

பல தரமான வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் வழங்கி வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக வழங்கும் ஒரு புதிய