close
Choose your channels

நடிகை அசின் திருமண தேதி அறிவிப்பு

Sunday, October 25, 2015 • தமிழ் Comments

பிரபல நடிகை அசின் பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டல் ஒன்றில் ராகுல்-அசின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இந்த திருமணத்தில் இருவீட்டார்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நவம்பர் 27ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள West End Greens என்ற பண்ணை வீட்டில் ரிஷப்ஷன் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த இடத்தில்தான் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் மற்றும் வரவேற்பு முடிந்தபின்னர் அசின், தனது மும்பை நண்பர்களுக்கு மும்பையில் ஒரு ரிஷப்ஷன் ஏற்பாடு செய்திருப்பதாகவும், இதன் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், இருவீட்டார்களும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz