close
Choose your channels

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே மேக்கப் போடும் தனுஷ் பட நாயகி: வைரல் வீடியோ!

Saturday, October 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே படப்பிடிப்பிற்கு மேக்கப் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான ’ராஜண்ணா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் சோனம் கபூர். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆனந்த் அஹூஜா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சோனம் கபூருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றுக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போதே அவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில், ‘எனது நிஜமான உலகிற்கு மீண்டும் திரும்பி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் மும்பைக்கு படப்பிடிப்புக்காக வந்துள்ளேன். லவ் யூ மும்பை’ என்று பதிவு செய்துள்ளார்.

சோனம் கபூரின் இந்த பதிவுக்கு அவரது கணவர் ’வலிமையான தாய்’ என கமெண்ட் செய்திருந்தார். சோனம் கபூரின் இந்த பதிவும் அவருடைய கணவரின் கமெண்டும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.