close
Choose your channels

நீங்க வேற லெவல் பவி டீச்சர்: 'தளபதி 64' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்

Friday, November 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது

இந்த படத்தில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாகவும் இந்த படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகள் டெல்லியில் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் மாளவிகா மேனன் நாயகியாகவும், மேலும் இரண்டு முக்கிய கேரக்டர்களில் ரம்யா மற்றும் பிரிகிதா நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ‘பவி டீச்சர்’ என்ற கேரக்டரில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து புகழ் பெற்ற நடிகை பிரிகிதா, டெல்லியில் ‘தளபதி 64’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது. ‘நீங்க வேற லெவல் பவி டீச்சர் என்றும், இந்த படத்தில் நல்லா நடிங்க என்றும், ‘தளபதி எப்படி இருக்கார்? என்றும் விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.