ரிசார்ட்டில் போதை பார்ட்டி: போலீஸாரின் அதிரடி ரெய்டில் நடிகை கைது!

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

ரிசார்ட் ஒன்றில் போதை பார்ட்டி நடக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடியாக சோதனை செய்ததில் நடிகை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி, கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இது குறித்து மேலும் சில நடிகைகளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் போதை பார்ட்டி நடக்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த பார்ட்டிக்கு முன்னணி நடிகர் நடிகைகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் போதை பார்ட்டி நடப்பதற்கு முன்பே ரிசார்ட்டில் போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது போதை பவுடர் உள்பட ஒரு சில வகை போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்தனர். இந்த ரெய்டில் 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒருவர் மலையாள நடிகை பிரிஸ்டி பிஸ்வாஸ் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளதோடு மாடலிங்கும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதை பொருள் விவகாரத்தில் மலையாள நடிகை பிரிஸ்டி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டிருப்பது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பார்ட்டியில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் வருவதாக இருந்ததாகவும், பார்ட்டி நடப்பதற்கு முன்னரே ரெய்டு நடந்ததால் அவர்கள் நூலிழையில் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.