close
Choose your channels

எமி ஜாக்சனை அடுத்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அஜித் பட நடிகை!

Monday, May 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'தெறி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த எமிஜாக்சன் சமீபத்தில் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானார் என்ற செய்தி வெளிவந்தது தெரிந்ததே. அந்த வகையில் விஜய் பட நடிகையை அடுத்து அஜித் பட நடிகை ஒருவரும் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகியுள்ளார். அவர்தான் புருனா அப்துல்லா.

அஜித் நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கிய 'பில்லா 2' திரைப்படத்தில் நடித்த இரண்டு நாயகிகளில் ஒருவர் புருனா அப்துலா. பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் 'பில்லா 2' மட்டுமின்றி சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் புரூனாவுக்கும் இவருடைய நீண்டநாள் காதலருமான ஆலன் பிரேசர் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தற்போது புரூனா ஐந்து மாத கர்ப்பம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புகைப்படத்துடன் கூடிய தகவலை புரூனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் குழந்தை பெற்றுவிட்டு திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமான ஒன்றே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.