சிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சிம்பு ஹீரோவாக அறிமுகமான ’காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தின் நாயகி சார்மியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழில் ’காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’காதல் கிசுகிசு’ ’ஆஹா எத்தனை அழகு’, 10 என்றதுக்குள்ள’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை சார்மி கவுர். இவர் தன்னுடைய பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து தான் மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பத்தில் இருக்கும் போதே மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாவது எளிது என்றும் எனது பெற்றோர்கள் அவ்வாறுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் சார்மி தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பெற்றோர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் மருத்துவர் நாகேஸ்வரராவ் அவர்கள் தகுந்த முறையில் சிகிச்சை அளித்து எனது பெற்றோரை குணப்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சார்மியின் பெற்றோர்கள் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.