அமேசான், நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக 400 கோடி முதலீடு செய்யும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,January 25 2022]

அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களுக்கு 400 கோடிகள் செலவு செய்து திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களை தயாரிக்க பிரபல நடிகை ஒருவர் முன்வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இணை இயக்குனராக உள்ள நிறுவனம் க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் என்பதும், இந்த நிறுவனத்தை அனுஷ்கா சர்மாவின் சகோதரர் கர்னேஷ் சர்மா, நடத்தி வருகிறார் என்பதும் இந்நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் குடும்ப நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் தயாரிக்கும் 'சக்தா எக்ஸ்பிரஸ்' என்ற படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமி வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதும், அவரது கேரக்டரில் அனுஷ்கா சர்மா நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களை தயாரிக்க 400 கோடிகள் செலவு செய்ய அனுஷ்கா சர்மாவின் க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.