close
Choose your channels

சேலை காஸ்ட்யூமில் தேவயானி மகள்.. அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாகிவிட்டாரா?

Monday, February 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் ஒரு பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த தேவயானியின் மகள் சேலை கட்டிய இளம் பெண் போன்ற தோற்றத்துடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

’தொட்டா சிணுங்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தேவயானி. ஆனால் அஜித் நடித்த ’காதல் கோட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு விஜய் நடித்த ’நினைத்தேன் வந்தாய்’ சரத்குமார் நடித்த ’சூரிய வம்சம்’ மம்முட்டி நடித்த ’மறுமலர்ச்சி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் மட்டும் இன்றி அவர் சீரியல்களிலும் நடித்தார் என்பதும் அவர் நடித்த ’கோலங்கள்’ என்ற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மூத்த மகள் இனியா கடந்த 2006 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் தற்போது அவர் 17 வயது குமரியாக மாறி உள்ளார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட தேவயானியின் மகள் இனியாவின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர் சேலை அணிந்த காஸ்ட்யூமை பார்த்து தேவையானி மகள் இவ்வளவு பெரிய பெண்ணாகிவிட்டாரா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோயின் கிடைத்து விட்டதாக ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.