சோகத்தில் மூழ்கிய நடிகை தேவயானி குடும்பம்

  • IndiaGlitz, [Sunday,September 08 2019]

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை தேவயானி தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருடைய சகோதரர் தான் நடிகர் நகுல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேவயானி, நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

தாயாரை இழந்து தேவயானி, நகுல் குடும்பமே சோகத்தில் இருக்கும் நிலையில் இருவருக்கும் திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.