கழுத்தில் மல்லிகைப்பூ.. நெஞ்சில் டாட்டூ.. தர்ஷா குப்தாவின் நீச்சல் குள வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை தர்ஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மூலம் இணையத்தை கலக்கியுள்ளார்.
நீச்சல் குளத்தில் கிளாமர் உடையில் காணப்படும் தர்ஷா, கழுத்தில் மல்லிகைப்பூ அணிந்தவாறு, நெஞ்சில் டாட்டுடன் காணப்படும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 2 மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தர்ஷா. பின்னர் 'சூப்பர் சிங்கர்', 'காமெடி ராஜா கலக்கல் ராணி', 'பிக் பாஸ்' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றார். இதற்கு மேலாக 'முள்ளும் மலரும்', 'செந்தூரப்பூவே', 'மின்னலே', 'அவளும் நானும்' போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
சினிமாவிலும் தன்னை நிரூபிக்க முயன்ற தர்ஷா, 'ருத்ர தாண்டவம்' மற்றும் 'ஓ மை கோஸ்ட்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சுமார் 2.5 மில்லியன் பின்தொடர்பவர்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தம்முடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிரும் தர்ஷா, தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் நெஞ்சில் உள்ள டாட்டூவும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரசிகர்கள் பலரும் கமெண்ட் மூலம் தங்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments