சொகுசு படகில் சென்ற பிரபல நடிகை மர்ம மரணம்: கொலையா? விபத்தா? என விசாரணை

  • IndiaGlitz, [Sunday,February 27 2022]

பிரபல நடிகை ஒருவர் சொகுசு படகில் சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தா? என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை நிடா பட்சரவீரபாங் என்பவர் கடந்த 26ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் மேனேஜருடன் சொகுசுப் படகில் சுற்றுலா சென்றார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து தண்ணீரில் விழுந்ததாகவும் இதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

நடிகை நிடா பட்சரவீரபாங் படகில் இருக்கும்போது லைஃப் ஜாக்கெட் அணியாமல் இருந்தால் தான் அவர் உயிரிழக்க காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும் அவர் உயிரோடு இருக்கக் கூடாது என்பதற்காக யாரோ ஒருவர் அவரை வேண்டுமென்றே தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்து இருக்க வேண்டும் என்றும் நடிகையின் அம்மா புகார் கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் தாய்லாந்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

More News

மீண்டும் போனிகபூர்-எச்.வினோத் கூட்டணி: ஆனால் இம்முறை அஜித் ஹீரோ இல்லை!

போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகிய 'நேர் கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன

நயன்தாராவின் குஜராத்தி திரைப்படம் விஜய்சேதுபதி படத்தின் ரீமேக்கா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது தனது காதலருடன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல தமிழ் படங்களை தயாரித்து வரும் நிலையில் முதல்

கமல்ஹாசன் வீட்டிற்குள் மீண்டும் புகுந்த கொரோனா: இம்முறை யாருக்கு தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் சில நாட்களில் அவர் குணமாகி வீடு

சிம்புவை பார்த்ததும் துள்ளி குதித்த போட்டியாளர்கள்: நிரூப் முக்கிய சந்தேகம்!

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இன்று முதல் சிம்பு தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த முதல் புரமோ சில மணி நேரங்களுக்கு வெளியாகி

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த டிடி: எந்த கேரக்டரில் தெரியுமா?

விஜய் டிவி பிரபலமான டிடி என்கிற திவ்யதர்ஷினி ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.