ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கெளதமியா?

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

பிரபல நடிகை கெளதமி, நடிப்பில் மட்டுமின்றி சமூகசேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பதும் மனதில் தோன்றிய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துபவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து முதன்முதலாக தைரியமாக பிரதமருக்கு கடிதம் எழுதியவர் கெளதமி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாஜக, பிரபலமான ஒருவரை, குறிப்பாக திரையுலகை சேர்ந்த ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாம். ஆர்.கே.நகர் வேட்பாளர் பரிசீலனையில் நடிகை கெளதமி, நடிகர் விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுமார், கங்கை அமரன் உள்பட பலர் உள்ளார்களாம்.

இந்நிலையில் சமீபத்தில் பாஜக மேலிடத்தை சேர்ந்த ஒருவர் நடிகை கெளதமியை சந்தித்ததாகவும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது இன்னும் ஓரிருநாட்களில் பாஜகவின் வேட்பாளர் அறிவிப்பின்போது தெரியவரும்.

More News

ஒருபக்கம் விபூதி, இன்னொரு பக்கம் குங்குமம். தமிழக அரசியலில் ஆன்மீகம்

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனியாக பேரவை ஒன்றை ஆரம்பித்து அரசியலில் சமீபத்தில் நுழைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணிடம் சில்மிஷம். பிரபல தயாரிப்பாளர் கைது

நடிகர், நடிகைகளின் ஆடம்பரமான வெளிப்புற பகட்டை நம்பி திரையுலகில் நாமும் சாதிக்கலாம் என்று நாள்தோறும் புதிய முகங்கள் திரையுலகில் நுழைய முயற்சித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் ஆரம்பமாகும் 'போஸ்டல் வங்கி'

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு பிரச்சனை ஏற்பட்டபோது வங்கி வாடிக்கையாளர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. நம்முடைய கணக்கில் இருந்த பணத்தை எடுக்க பல கண்டிஷன்கள்.

ஆரம்ப விலை ரூ.50 கோடி. அஜித் படத்தின் அமோக வியாபாரம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவிருப்பதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தையையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அருண்விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் பிரபல இயக்குனர்

சமீபத்தில் வெளியான அருண்விஜய்யின் 'குற்றம் 23' என்ற மெடிக்கல் க்ரைம் திரைப்படம் தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.