சென்னை போலீஸ் கமிஷனரிடம் திடீரென புகார் அளித்த கெளதமி.. என்ன காரணம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை கௌதமி திடீரென சென்னை போலீஸ் கமிஷனரிடம் தனது உயிருக்கு ஆபத்து என்றும், தனக்கு மிரட்டல் வந்து கொண்டிருப்பதாகவும் கூறி, அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த கௌதமி, அரசியலிலும் ஈடுபட்டார். முதலில் பாஜகவில் இணைந்த அவர், தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் உள்ளார்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் அவருக்கு சொந்தமான ₹9 கோடி மதிப்புள்ள சொத்தை, அழகப்பன் என்பவர் அபகரித்துவிட்டதாக கூறப்பட்டு, இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடம் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கௌதமி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், தனது நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் தன்னிடம் லஞ்சம் கேட்கிறதாகவும், வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறி போஸ்டர் அனுப்பியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். தன்னை மிரட்டும் நபர்கள் மூலமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், எனவே தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மிரட்டல் கொடுத்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கௌதமி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com