உங்கள் தளபதி.. என்ன ஒரு ஸ்வீட்.. 'சச்சின்' நாயகி ஜெனிலியா வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரீரிலீசாகி உள்ள நிலையில், இந்த படம் ஒரிஜினல் ரிலீஸ் படம் போலவே வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது. மேலும், இந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த படத்தில் நாயகியான 'ஷாலினி' கேரக்டரில் நடித்த நடிகை ஜெனிலியா, தளபதி ரசிகர்களுக்கு நன்றி கூறி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
"வணக்கம் தளபதி ரசிகர்களே! எப்படி இருக்கீங்க? நான் உங்கள் ஷாலினி... ஆம் டபுள் ஐ ஷாலினி தான் பேசுகிறேன்!
20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சச்சின்’ படம் ரிலீஸ் ஆகி, அது பெரும் வரவேற்பை பெற்று வருவதை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதேபோல் இப்போதும் வரவேற்பை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்.
உங்கள் தளபதி... என்ன ஒரு ஸ்வீட்! உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய இதயத்தின் அடித்தளத்தில் இருந்து அனைத்து தளபதி ரசிகர்களுக்கும் சச்சினை மிகப்பெரிய திருவிழா போல் கொண்டாடி வருவதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி ரசிகர்களுக்கு நன்றி கூறும் @geneliad
— Kalaippuli S Thanu (@theVcreations) April 24, 2025
Thanks to our dearest Shalinii
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP #Vadivelu @iamsanthanam @bipsluvurself #ThotaTharani #VTVijayan #FEFSIVijayan @idiamondbabu @RIAZtheboss @APIfilms @dmycreationoffl @Ayngaran_offl… pic.twitter.com/oP8cse0pvv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com