இந்தி பட வாய்ப்பு வந்தால் டீசர்ட்டை கழட்டிவிடுவார்கள்: பிக்பாஸ் நடிகை

கடந்த சில நாட்களாக இந்தி மொழிக்கு எதிரான டீசர்ட்டுகளை அணிந்து திரையுலகினர் சிலர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஸ்தம்பித்து வருகின்றனர் என்பதும் இதுகுறித்த ஹேஷ்டேக்குகளை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இதுகுறித்து நகைச்சுவை நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்... ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு, விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் டிசர்ட்டை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள், ஜாக்கிரதை’ என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஆர்த்தி இன்னொரு டுவிட்ட்டில், ‘இந்திய மொழிகளில் ஒன்று இந்தி, அது வேண்டானு எதிர்பீங்க, ஆனா எங்கேயோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்தியிருந்த ஆங்கிலத்தை அரவணைப்பீங்க’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஆர்த்தியின் இந்த டுவிட்டுக்களுக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்களை மாறி மாறி பதிவு செய்து வருகின்றனர்.
 

More News

நடிகர் கொட்டாச்சி இயக்கும் திரைப்படம்: உதவி செய்யும் அருண்விஜய்!

தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு கேரக்டரில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தவர் நடிகர் கொட்டாச்சி. இவருடைய மகள் மானஸ்வி குழந்தை

ஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்: மும்பை இந்தியன்ஸ்

ஐந்தாவது முறையாகப் பட்டையைக் கிளப்புமா டான் ரோஹித்தின் மும்பை! ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கில்லி அணியாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த வருசம் பிக்பாஸ் உங்களால பண்ணவே முடியாது: கமலுக்கு மீராமிதுன் சவால்

இந்தியாவின் சூப்பர் மாடல்களில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.

திருமணத்திற்கு பின் ஆரவ் பதிவு செய்த முதல் டுவீட்டில் டுவிஸ்ட்!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கும் கௌதம் மேனன் இயக்கிய 'ஜோஷுவா இமைபோல் காக்க' என்ற

ஊரடங்கில் வேலையிழந்ததால் கஞ்சா கடத்திய சென்னை சாப்ட்வேர் இஞ்சினியர்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்ததாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது.