close
Choose your channels

100 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை: ரஜினி பட நடிகையின் உதவி!

Tuesday, May 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நடிகை ஒருவர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஒன்றை கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’காலா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி.

இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தலைநகர் டெல்லியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையில் நிறுவும் முயற்சியில் ஹூமா குரேஷி ஏற்படுத்தி வருகிறார்.

இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அனைத்து வசதியுடன் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவரின் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அவர் தனது உதவியை செய்து வருகிறார்

ஒவ்வொரு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமாகும் வரை மருத்துவ உதவிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.