சிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாரதவிலாஸ், பைலட் பிரேம்நாத் உள்ளிட்ட படங்களிலும், கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, சினிமா பைத்தியம், தேன்சிந்துதே வானம், உள்ளிட்ட படங்களிலும், ரஜினிகாந்த் நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது, சதுரங்கம், வணக்கத்துக்குரிய வாத்தியாரே, போன்ற படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெயசித்ரா
தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் மலையாளம் கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்
இந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் என்பவர் இன்று திருச்சியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜெயசித்ராவின் கணவரின் மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
நடிகை ஜெயசித்ரா கடந்த 1983-ம் ஆண்டு கணேஷை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயசித்ரா-கணேஷ் தம்பதிக்கு அம்ரேஷ் என்ற மகன் உள்ளார் என்பதும் இவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது
பிரபல நடிகை ஜெயசித்ரா அவர்களின் கணவரும், இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்களின் தந்தையுமான கணேஷ் அவர்கள் திருச்சியில் இன்று காலமானார்.#RIP ??????@AmrishRocks1
— RIAZ K AHMED (@RIAZtheboss) December 4, 2020