ரஜினி பட நடிகையின் வைரத்தோடு மாயம்: கண்டுபிடித்தால் சன்மானம் என அறிவிப்பு!

பிரபல நடிகை ஒருவரின் வைரத்தோடு மும்பை விமான நிலையத்தில் காணாமல் போனதை அடுத்து அந்த வைரத்தோடை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் தருவேன் என்று அந்த நடிகை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழில் ’பருவராகம்’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஜூஹி சாவ்லா. இவர் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூஹி சாவ்லா சமீபத்தில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கவுண்டர் செக்கிங் செய்துவிட்டு பாதுகாப்பு சோதனைக்காக காத்திருந்தார். அப்போது அவரது ஒரு காதில் இருந்த ஒரு வைரத்தோடு காணாமல் போனதாக தெரிகிறது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மும்பை விமான நிலையத்தில் உட்கார்ந்து இருந்தபோது ஒரு காதில் இருந்த வைரத்தோடு கீழே விழுந்து காணாமல் போய்விட்டது. அந்த தோடை நான் கடந்த 15 வருடங்களாக அணிந்து வருகிறேன். அது எனக்கு ராசியான தோடு. அந்த தோடை கண்டவர்கள் தயவு செய்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவியுங்கள், தகுந்த சன்மானம் அளிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னிடம் உள்ள இன்னொரு தோட்டின் புகைப்படத்தினையும் அவர் பதிவு செய்துள்ளார்.