close
Choose your channels

நயன்தாராவை அடுத்து அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய பிரபல நடிகை!

Tuesday, November 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலுள்ள அஜ்மீர் தர்ஹாவுக்கு நடிகை நயன்தாரா சென்று இஸ்லாமிய வழக்கப்படி நடிகை நயன்தாரா வழிபாடு நடத்தினார். ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பின்போது அவர் ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடந்தபோது அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நயன்தாராவை அடுத்து அஜ்மீர் தர்காவுக்கு பிரபல நடிகை காஜல் அகர்வால் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தலையில் மலர்க்கூடையை அவர் சுமந்து சென்று சிறப்பு தொழுகை நடத்தியதாக வெளியாகியுள்ள புகைப்படங்களில் இருந்து தெரிய வந்துள்ளது

நடிகை காஜல் அகர்வால் தற்போது இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் 85 வயது முதிய பெண் கேரக்டரில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.