அம்மாவின் தற்கொலை குறித்து உருக்கமாக பதிவு செய்த நடிகை!

  • IndiaGlitz, [Thursday,May 26 2022]

தமிழ் நடிகை ஒருவர் தனது அம்மாவின் தற்கொலை குறித்து உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

குழந்தை நட்சத்திரம் முதல் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணிதா. விஜயகாந்த் நடித்த ’ரமணா’ திரைப்படத்தில் அவர் தத்தெடுத்த குழந்தைகளில் ஒருவராக நடித்திருந்த பூர்ணிதா, அதன்பின் ’ஜெயம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதேபோல் ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை கல்யாணி தனது சமூக வலைத்தளத்தில் தனது அம்மாவின் தற்கொலை குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி என்னுடைய அம்மாவை மட்டும் இல்ல, என்னுடைய ஆன்மாவையும் இழந்தநாள் என்றும், ஒரு சாதாரண நாளாக ஆரம்பித்து அன்றைய நாள் கொடூரமான நாளாக மாறியதை என்னால் மறக்கவே முடியாது என்றும் கூறியிருந்தார்.

அன்றைய தினம் ஜிம்முக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் இருந்த அம்மாவையும் அழைப்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டு இருந்ததாகவும் இதனை அடுத்து ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது என் அம்மா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அன்று முதல் என் வாழ்க்கையே மாறிவிட்டது என்றும் கூறினார்.

அம்மா இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதால் நானும் என் ஆன்மாவை இழந்து விட்டதாகவே உணர்ந்தேன் என்று கூறியுள்ள கல்யாணி, அம்மாவின் டைரியைப் படித்த பின்னர் தான் அவர் நீண்ட காலமாக சோகமாக இருந்தது தெரியவந்தது என்றும், அவர் தன்னுடைய சோகத்தை எங்களிடம் சொல்லி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அம்மாவின் தற்கொலையால் மன விரக்தியில் இருந்த கல்யாணி, தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகவும் ஆனால் தனது கணவர் தனக்கு ஆறுதலாக இருந்ததால் தற்போது நன்றாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

ஊரே சிரிக்க போகுது அப்பப்பா: ஆர்ஜே பாலாஜியின் 'வீட்ல விசேஷம்' டிரைலர்

ஆர் ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷம்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி - அருண் விஜய் படத்தின் லேட்டஸ் அப்டேட்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த 'அக்னி சிறகுகள்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழுவினர்

சில்க் ஸ்மிதாகவே மாறிய பிக்பாஸ் நடிகை: ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர், சில்க் ஸ்மிதா மாதிரியே போட்டோஷுட் புகைப்படங்கள் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

உதயநிதியால் திரையுலகிற்கு கிடைத்த பாதுகாப்பு: சீமான் புகழாராம்

திமுக ஆட்சி வந்த பிறகு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பயமுறுத்தி அனைத்து திரைப்படங்களில் ரிலீஸ் உரிமையை பெற்று வருவதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில் உதயநிதியின்

 அஜித் போட்ட ஒரே ஒரு நிபந்தனை: விக்னேஷ் சிவன் அதிர்ச்சி!

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் அஜித் போட்ட ஒரே ஒரு நிபந்தனையால் விக்னேஷ் சிவன் தரப்பு அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.