வழக்கறிஞரையும் சிறையில் அடையுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை!

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை சோனியா காந்தி மன்னித்தது போல நிர்பயா குற்றவாளிகளையும் அவருடைய தாயார் மன்னிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை கங்கனா ரணாவத் கூறியபோது ’நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கையும் சிறையிலடைக்க வேண்டும் என்றும் இவர் போன்றவர்களால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் ஆவேசமாகக் கூறியுள்ளார். கங்கனா ரனாவத்தின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்: திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்த மனைவி!

திருமணமான 4 மாதத்தில் தனது கணவர் அவரது அண்ணியுடன் உல்லாசமாக இருப்பதை கண்டுபிடித்த புதுமணப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரஜினி இனிமே உயிரோடவே இருக்க முடியாது: பெரியாரிஸ்டுகள் ஆவேசம் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியார் குறித்து கூறிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தெருவில் போவோர் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடி வைத்தியம் கடைபிடிக்கப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்ததே.

உலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளி கௌசல்யா என்பவர் சமீபத்தில் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார்

அமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா?

நடிகை அமலாபால் நடித்த 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் அமலாபால் 'க்ராவ் மகா' என்ற தற்காப்பு கலையை பயன்படுத்தியுள்ளார்