தயாரிப்பு, இயக்கத்தில் களமிறங்கும் முன்னணி நடிகை!

  • IndiaGlitz, [Monday,June 08 2020]

ஒரு முன்னணி நடிகை, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் களமிறங்குவது மிக அரிதாகவே இந்திய திரையுலகில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னணி நடிகை ஒருவர் ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்க உள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ என்ற தமிழ் படத்திலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் இருந்து வரும் நடிகை கங்கனா ரணவத், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக ’அபராஜிதா அயோத்யா’ என்ற டைட்டிலில் உருவாக உள்ளது. இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அயோத்தி ராமர் கோவில் வழக்கு பற்றிய திரைப்படம் இது என்றும் இந்த படத்தை தயாரித்து கங்கனா ரனாவத்தே இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த திரைப்படத்தின் திரைக்கதையை ’பாகுபலி’ இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தயாரித்து இயக்கினாலும் கங்கனா ரணவத் இந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது

More News

ஊரடங்கில் டாஸ்மாக் திறப்பது போல அல்ல 10ம் வகுப்பு தேர்வு: நீதிபதிகள் அதிரடி கருத்தால் பரபரப்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடத்தி வந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்

யாரெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டும் – WHO கூறியுள்ள புது விதிமுறைகள்!!!

உலகச் சுகாதார அமைப்பானது தனது முந்தைய வழிகாட்டுதல்களில் “ஆரோக்கியமான நபர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் வயதானவர்கள்,

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் அஞ்சலி?

நானும் ரெளடிதான்' 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய திரைப்படங்களை அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்

தமிழ்நாட்டில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறதா சென்னை? அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தமிழகத்தின் மொத்த பாதிப்பில்

இந்தியாவில் இனவெறுப்புடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் டேரன் சமி!!!

மேற்கு இந்திய தீவு, கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது இனவெறியுடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.