கப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை!

  • IndiaGlitz, [Saturday,October 19 2019]

அஜித் நடித்த ‘வரலாறு’ உள்பட பல தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. இவர் நடிகையாக மட்டுமின்றி ‘சச்சின்’, ‘அன்னியன்’, ‘சிவாஜி’ போன்ற படங்களின் நாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்க சாப்ட்வேர் எஞ்சினியரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துவிட்டாலும், அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போலவே ‘கப்புள் வொர்க் அவுட் சேலஞ்ச்’ உலகம் முழுவதும் வைரலாகி வரும் நிலையில் கனிகா தனது கணவருடன் இணைந்து இந்த சேலஞ்சை செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை கனிகா தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் பெயரிடப்படாத படம் ஒன்றில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்த முக்கிய அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது

'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், தனது சமூக வலைத்தளத்தில், 'அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக

'பிகில்' இயக்குனர் அட்லீ குறித்து பரவி வரும் வதந்தி!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும்

கவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதலித்ததும், அந்த காதலுக்கு லாஸ்லியா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் கவின், லாஸ்லியா ஆகிய இருவருக்கும்

டெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.