close
Choose your channels

கஸ்தூரிக்கு பிடித்த சூப்பர் ஹீரோ! ஒருவர் செல்லூர் ராஜூ, இன்னொருவர்?

Tuesday, June 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் நடிகை கஸ்தூரி கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பரபரப்பான கருத்துக்களையும் பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அவர் போகிற போக்கை பார்த்தால் விரைவில் அரசியலில் குதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் 'உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி குபீர் சிரிப்பு வரும் வகையில் இருவரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவர் 'தெர்மோகோல்' புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூ, மற்றொருவர் விரைவில் கோலிவுட்டின் ஹீரோ ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் சரவணா ஸ்டோர் சரவணன் என்று கஸ்தூரி புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் கேலியும் கிண்டலுமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். நாஞ்சில் சம்பத், சசிகலா, ஓபிஎஸ், ஜெயகுமார் ஆகியோர்களை இந்த பட்டியலில் சேர்க்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கஸ்தூரியின் இந்த கலாய் பதிவு சமூக வலைத்தளத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.