ரஜினியின் அரசியல் பேச்சை கேட்டு கேட்டு போரடிக்கின்றது. பிரபல நடிகை

  • IndiaGlitz, [Saturday,May 20 2017]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேச ஆரம்பித்து சுமார் 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 1996ஆம் ஆண்டு திமுக-தமாக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியதில் இருந்தே அவரது மேடை பேச்சுகளிலும், திரைப்படங்களின் வசனங்களிலும் அரசியல் அவ்வப்போது கலந்து இருந்தது.

இந்த நிலையில் இந்த வாரம் ரசிகர்களின் சந்திப்பின்போதும் ரஜினியின் பேச்சில் அரசியல் காற்று சற்று பலமாக வீசியது. ஆனால் இந்த முறை அவரது பேச்சில் வீரியம் இருந்ததாகவும், எனவே இம்முறை அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் 'அரசியல் போர்' பேச்சு குறித்து பிரபல நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை... 'போர்' அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது...''கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு ரஜினி ரசிகர்களிடம் கண்டனங்களை பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாகவே நடிகை கஸ்தூரி அரசியல், சமூக பிரச்சனைகள் குறித்து தனது போல்டன கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிக்கு படிப்பறிவு இல்லை, அதனால் அவர் அரசியலுக்கு லாயிக்கில்லை: சுப்பிரமணியம் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று கருத்து சொல்லாத அரசியல்வாதிகளே இல்லை என்று கூறும் அளவுக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் தங்களுடைய கருத்தை கடந்த சில நாட்களாக பதிவு செய்து வருகின்றனர்

ரஜினி உருவப்பொம்மை எரிப்பு: சென்னையில் பதட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை இன்னும் அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை...

தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரலாம்! ரஜினி வரக்கூடாதா? பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இன்றைய அரசியல் பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பதை பார்த்தால் அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயப்படுவதாகவே புரிந்து கொள்ள முடிகிறது என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பிரதமர் மோடிக்கு கதை சொன்ன சச்சின் தெண்டுல்கர்

கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

ஸ்டாலினை பாராட்டிய ரஜினி மோடியை ஏன் பாராட்டவில்லை. தமிழிசை கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேசிய அரசியல் குறித்த பேச்சு தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பிவிட்டது...