close
Choose your channels

எம்ஜிஆர் லதாவை தடவுன மாதிரி..! கஸ்தூரி டுவீட்டுக்கு குவியும் கண்டனங்கள்

Wednesday, April 10, 2019 • தமிழ் Comments

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்து டுவிட்டர் பயனாளிகளின் கண்டனத்தை பெற்று வருகிறார்.

இந்த போட்டியில் 109 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற எளிய இலக்கை நோக்கி நேற்று விளையாடியது. குறைவான இலக்காக இருந்தாலும் ஆரம்பத்திலேயே வாட்சன் விக்கெட் விழுந்துவிட்டது என்பதால் நிதானமாக விளையாடிய சென்னை அணியை ,'என்னய்யா இது  . பல்லாண்டு வாழ்க படத்துல  வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க' என்று நடிகை கஸ்தூரி பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு டுவிட்டர் பயனாளிகளும் சிஎஸ்கே ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் 'அமைதிப்படை அல்வா'வை குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கஸ்தூரியின் இந்த டுவீட் காமெடிக்காக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாகரீகமாக பதிவு செய்திருக்கலாம் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz