லாட்டரி, சூதாட்டம், கஞ்சா, பலான இடம், எல்லாத்தையும் திறந்துடுங்க: கஸ்தூரி ஆவேசம்

நடிகை கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ஆவேசமாக தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அரசுக்கு வருமானம் கிடைக்க இன்னும் என்னென்னால் திறக்கலாம் என்பது குறித்து நையாண்டியாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

தனியொருவனுக்கு தண்ணியில்லையினில் ஜகத்தினை அழித்திடுவோம்ங்கற அசுர வேகத்தோட இன்னிக்கு உச்சநீதிமன்றத்துல தமிழகம் சார்பா ரெண்டு கேஸ் பைலை பண்ணியிருக்காங்க. மே 17 வரைக்கும் கூட தாக்கு பிடிக்க முடியாதாம். தண்ணியில்லாம தமிழகம் இருந்திறக்கூடாதாம்! இது காவிரி பிரச்சினையா, முல்லை பெரியார் பிரச்சினையா , தமிழக மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினைக்கா என்று யாரும் தப்பா நினைச்சிறாதீங்க. அதையெல்லாம் விட மிக முக்கியமான, மக்களுக்கு அத்தியாவசியமான, சமூகத்துக்கு தேவையான சாராய மேட்டர் இது! தங்கு தடையில்லாத தண்ணி சப்ளை நடத்தும் 'உரிமையை' கேட்டு தமிழக அரசு ஒரு மனு, மேலதிகமாக டாஸ்மாக் இன்னொரு மனு, சுப்ரீம் கோட்டுல இன்னிக்கி! அட அடா ! தமிழனுக்கு தண்ணி வேணும்கற இந்த பொறுப்புணர்ச்சிய எப்படி பாராட்டுறதுன்னே புரியலையே!

இது கொள்கை முடிவாம். கோர்ட் இதில் தலையிட கூடாதாம். கொள்கைன்னா 'வாய்மையே வெல்லும்' 'தர்மம் தலைகாக்கும்' 'சம உரிமை சமூக நீதி' இதெல்லாம் கொள்கை. 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்றால், அது கொள்கை. அதை சொன்ன அண்ணா இன்று இருந்தால், 'அண்ணா திமுக ' அரசின் கொள்கையை பார்த்து என்ன சொல்லுவார்? இங்கே யாரும் பூரண மதுவிலக்கை கூட கோரவில்லை. கொரோனா தொற்று அதிகரித்து அச்சுறுத்தும் வேளையில், டீக்கடை கூட திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதுக்கடையை திறப்பது என்ன லாஜிக் என்றுதான் கேட்கிறோம். பள்ளிகள், கடைகள், சினிமா, கோவில் தேவாலயங்கள், என், பார்க்கு கடைகரையை கூட மூடிவிட்டார்கள். கோவிலிலும் உடற்பயிற்சிக்கூடத்திலும் எதிர்பார்க்கமுடியாத சுயக்கட்டுப்பாட்டை மதுக்கடையில் உத்திரவாதம் குடிக்கிறது நமது அரசு!

கேரளாவில் மது என்பதை தவறாகவே பார்ப்பதில்லை. குடிப்பதில் சாதனையாளர்கள் என்று பெருமை பெற்றவர்கள் மலையாளிகள். பாண்டிச்சேரியும் மது விற்பனைக்கு பெயர் போனது. அப்பேற்பட்ட கேரளாவிலும் புதுச்சேரியுமே மதுக்கடைகளை ஊரடங்கு நேரத்தில் திறக்க முற்படவில்லை. அப்புறம் எதற்கு அண்டை மாநிலம் என்று சாக்கு சொல்லுகிறீர்கள்? ஊரடங்கு நேரத்தில் அடுத்த தெருவுக்கு கூட சென்றால் கூட ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள், அண்டை மாநிலத்துக்கு அவ்வளவு ஈசியாக ஆளை விட்ருவீங்களா? இப்பிடி சொல்வது நமது காவல்துறைக்கு அவமானமில்லையா. அண்டை மாநிலத்துக்கு காசை கொடுக்காதே, பக்கத்துக்கு ஊருல போயி குடிக்கற அந்த பணத்தை எனக்கே குடு, நானே ஊத்தி கொடுக்கறேன் என்று சொல்லும் அரசு, அடுத்தது இது போன்ற வருமான இழப்புக்களை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம்? எப்படியெல்லாம் கொள்கை முடிவு எடுக்கலாம்?

பக்கத்துக்கு மாநிலத்தில் லாட்டரி, சூதாட்ட விடுதிகள் உள்ளன. அங்கு என் நம்மாட்கள் போகவேண்டும், அதையும் இங்கே திறக்கலாம். உள்ளூரிலேயே எல்லாரும் லாட்டரியடிக்கலாம். கோவா நேபாள் ஸ்ரீலங்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கேசினோ உள்ளது. பணக்காரர்கள் அங்கே போய் விடுகிறார்கள். இங்கே மலிவு விலை சூதாட்ட விடுதிகளை தொடங்கி நம்ம மக்களை அடகு வைக்கலாம். பாகிஸ்தான்காரன் கள்ளநோட்டு அடிக்கறான். நாட்டுக்கு ரொம்ப நஷ்டம். கள்ளநோட்டை நாமே அடிச்சுட்டா நம்ம ஊரு அச்சு தொழிலும் கூடும், அண்டை நாட்டுக்காரனுக்கும் ஆப்பு வைச்சுடலாம். கள்ள மார்க்கெட்டில் கஞ்சா ஹெரோயின் போதை மருந்து விற்பனை அமோகமாக இருக்கிறது. கள்ள மார்க்கெட்டை முறைப்படுத்தி அங்கீகாரம் கொடுத்துவிட்டால், போதை பொருள் விற்பனை துறையில் அரசுக்கு நல்ல வரி வரும், மக்களுக்கும் தரமான போதை கிடைக்கும். பலான விஷயங்களுக்காக பாங்காக் வரை போகும் நம்ம ஆளுங்க பணத்தை அங்கே செலவு பண்ணிடறாங்க. அதனாலே....

இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

More News

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை ஏற்று கொண்ட விஜய்: லாக்டவுன் முடிந்ததும் சந்திக்க விருப்பம்

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் பாடலை மிக அருமையாக பாடியதாக செய்தி வெளியிட்டு இருந்தார்.

கடவுள் வெளியே இல்லை, அம்மாவிடம் தான் உள்ளார்: ராகவா லாரன்ஸின் அன்னையர் தின வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் டுவிட்டரில் இரண்டுக்கும் மேற்பட்ட அன்னையர் தின ஹேஷ்டேக்குகள் டிரண்டில் உள்ளன.

மீண்டும் முதலிடத்தை பிடித்த ராயபுரம்: கருஞ்சிவப்பு பகுதியாக அறிவிப்பு

சென்னையில் கடந்த சில வாரங்களாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கடந்த நான்கைந்து நாட்களாக ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவிக நகர் முதலிடத்தை பிடித்தது.

நாங்கள் கொடுத்த புகார் என்ன ஆயிற்று? காசி வழக்கை சுட்டிக்காட்டி சின்மயி கேள்வி

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞன் தன்னை தொழிலதிபர் என்று கூறிக் கொண்டும் வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டும் விமான ஓட்டுநர் பயிற்சியாளர் என்று கூறிக்கொள்ளும்

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்: ரஜினிகாந்த் டுவீட்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கும் நிலையில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே பொதுமக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி